என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- பெரம்பலூர் குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
- மங்கூன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என்று பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






