என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பந்தட்டையில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
- வேப்பந்தட்டையில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடந்தது
- தி.மு.க. அரசை கண்டித்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அ.தி.மு.க ஒன்றிய கழகத்தின் சார்பில் தி.மு.க அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தமிழக அரசின் விலைவாசி உயர்வு குறித்து சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேப்பந்தட்டை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் இருந்து திரளான அ.தி.மு.க வினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வினோத் வரவேற்று பேசினார். முடிவில் செல்லப்பிள்ளை நன்றி கூறினார்.
Next Story






