search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாடு பிரச்சார வாகனம்-  தொடர் ஜோதி ஓட்டம்  தொடங்கி வைப்பு
    X

    அ.தி.மு.க. மாநாடு பிரச்சார வாகனம்- தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கி வைப்பு

    • அ.தி.மு.க. மாநாடு பிரச்சார வாகனம்- தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் அதிமுக சார்பில் வரும் 20-ம்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளர் வரகூர் அருணாலசம் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் வரும் 20-ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு குறித்து பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மாநாட்டின் டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனமும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டமும் சென்னையிலிருந்து துவங்கி மாநில முழுவதும் சுற்றி வந்து நாளை (19ம்தேதி) மதுரை சென்றடைகிறது. இந்த மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனம் மற்றும் மாநாடு தொடர் ஜோதி ஓட்டம் நேற்று பெரம்பலூர் வந்தது.

    பெரம்பலூரில் மாநாடு டிஜிட்டல் விளம்பர பிரச்சார வாகனத்தையும், மாநாடு தொடர் ஜோதி ஓட்டத்தையும் கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பிரச்சாரம் வாகனம் மற்றும் ஜோதி ஓட்டம் நகர் முழுவதும் வலம் வந்தது. முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    Next Story
    ×