என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் உதவி தொகை திட்டத்தில்,  88சதவீத விண்ணப்பங்கள் பதிவு
    X

    பெண்கள் உதவி தொகை திட்டத்தில், 88சதவீத விண்ணப்பங்கள் பதிவு

    • பெரம்பலூரில் பெண்கள் உதவி தொகை திட்டத்தில், 88சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது
    • 76ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 88 சதவீதம் பதிவு ஏற்கனவே நடந்த முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 74,311 விண்ணப்பங்களும், முதற்கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்காக நடைபெற்ற முகாமில் 2,189 விண்ணப்பங்களும் என மொத்தம் 76,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நடந்த முகாம்களில் 95 சதவீத விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவிகளிடம் வழங்கப்பட்டு, அவற்றில் 88 சதவீத விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×