என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே தச்சு தொழிலாளர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
- பெரம்பலூர் அருகே தச்சு தொழிலாளர் வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது
- வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்ற போது சம்பவம் நடந்தது
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 48). தச்சுத் தொழிலாளியான இவர், திருமணமாகி குடும்பத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வீட்ைட பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு குடும்பத்துடன் சென்றார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி விட்டனர்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், உடனே வீடு திரும்பினார். பின்னர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 16 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






