என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட பொதுமக்கள் ராகி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு
- அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தினை பரிட்சார்த்தமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.
- ராகி நார்ச்சத்து, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது.
ஊட்டி,
ஊட்டி தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் கூட்டுறவுத்துறை, பொது வினியோக திட்டம், தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவடட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது வினியோக திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் ஆகியோர் அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தினை பரிட்சார்த்தமாக நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்.
ராகி நார்ச்சத்து, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக இருக்கிறது. சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் சிறந்த தற்காப்பு கருவியாக உள்ளன. எனவே பொதுமக்களிடம் ராகியை வாங்கி பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு நல்ல தரமான அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






