என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
- தார் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து பெரிய குழிகள் காணப்படுகிறது.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தருமபுரி,
தருமபுரி ஒன்றியம்,சோகத்தூர் பஞ்சாயத்தில் சவுளுப ்பட்டி,ரெட்டிஅள்ளி, மாட்டுகானூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி இல்லை.தனியார் மினி பேருந்து பஸ் நிலையத்திலிருந்து கொளகத்தூர் வரை செல்கிறது.இந்நிலையில் குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்திலிருந்து சவுளுப்பட்டி,ரெட்டிஅள்ளி,மாட்டுகானூர் மற்றும் கே.என்.சவுளூர் வரை உள்ள தார் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து பெரிய குழிகள் காணப்படுகிறது.
இந்த சாலை முழுவதும் ஆங்காங்கே குழிகள்,பள்ளங்கள் இருபதால் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் குழிகளில் தண்ணீர் இருப்பதால் வாகனங்களை இயக்க முடிவதில்லை.
மேலும் இந்த கிராமங்களுக்கு தெரு விளக்கு,சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட எதுவுமே இல்லை என தெரிவித்தனர். நகரத்தை ஒட்டியே அமைந்துள்ள இந்த கிராமங்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மலைப்பகுதி கிராமங்களை போல காட்சி அளிகிறது.
இங்கு உடனடியாக சாலைவசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.