search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் வெள்ளத்தை செல்பி எடுக்க திரளும் பொதுமக்கள்
    X

    பாலத்தில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.

    பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் வெள்ளத்தை செல்பி எடுக்க திரளும் பொதுமக்கள்

    • கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளி யேற்றப்படுகிறது.
    • நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக , மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளி யேற்றப்படுகிறது.

    இதனால் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, ஜமீன் எளம்பள்ளி,குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், வடகரையாத்தூர், ஆனங்கூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல் பாளை யம், கொந்தளம் ஆகிய ஊராட்சி மற்றும் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் ஆகிய பேரூராட்சி பகுதி காவிரி கரையோர பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் மீன் பிடிப்பதற்கும் காவிரி ஆற்றை கடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகை கள் அமைத்தும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது .

    இந்நிலையில் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரண மாக காவிரி கரையோரம் உள்ள விவசாய நிலங்க ளில் உள்ள கரும்பு, வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு,நெல் , சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் வெள்ள நீர் வயல்வெளிகளில் புகுந்துள்ளது. இதன் காரணமாக விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவேரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பரமத்தி வேலூரில் நாமக்கல் -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இருசக்கரகங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை பாலத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கை பார்த்து செல்பி எடுக்கின்ற னர்.

    அவர்கள் பாலத்தின் நெடுகிலும் கார்கள், இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூ றாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இதன் காரணமாக சேலத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் கரூர், கொடுமுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே காவல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகளும் நிறுத்தப்படும் கார்களை அப்புறப்படுத்தி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×