search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம்
    X

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அருகில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம்

    • கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்தது.
    • திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிடகூடாது என்று வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதி இந்த கோவிலை தழுவி செல்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

    சிறப்பு அதிகாரி நியமனம்

    இந்த விழாவுக்காக நெல்லை, தென்காசி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கண க்கானோர் ஒரு வாரத்துக்கு முன்பே கோவிலுக்கு வந்து குடில் அமைத்து தங்குவார்கள். ஆடி அமாவாசை தினத்தன்று அவர்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் அங்கு வந்து தங்குவதற்கும், தனியார் வாகனங்களில் கோவிலுக்கு செல்வதற்கும் வனத்துறை கடுமையான நிபந்தனைகள் விதித்து வந்ததால் ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த ஆண்டு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறப்பு அதிகாரியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியை நியமித்தார். மேலும் கோவில் திருவிழா முடியும் வரை வனத்துறையினர் இதில் தலையிட கூடாது என்றும் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டது.

    திருவிழா கோலாகலம்

    இந்நிலையில் இன்று காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் அமாவாசை திருவிழா நடைபெற்றது. இதற்காக அம்பை அகஸ்தியர் பட்டி யில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் ஏறி பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கோவிலுக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் முன்பு உள்ள பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல் இருப்பதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே நெல்லையில் இருந்து பேட்டை, கல்லூர், முக்கூடல் வழியாக பாபநாசம் செல்லும் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். ஆடி அமாவாசை யான இன்று ஏராளமான பக்தர்கள் பாபநாசம் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்தனர்.

    இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் ஆடி திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய இயக்குனர் மாரிமுத்து, சிறப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் ஆகியோர் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ் நிலையம், பாபநாசம் சோதனை சாவடி, சொரிமுத்தையனார் கோவில் ஆகிய இடங்களில் கூட்டாக ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×