search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., 3-ம் மண்டல பாசனத்தில் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு
    X

    பி.ஏ.பி., 3-ம் மண்டல பாசனத்தில் மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு

    • இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.
    • பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப் படும் என்றனர்.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்ற ன. நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 3ம் மண்டல பாசனத்திற்கு கடந்த டிசம்பர் 28ந் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

    இதன் வாயிலாக இரு மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை 120 நாட்களுக்குள், உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுக்களில் 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் மூன்றாம் மண்டலம் முதல் சுற்று முடிந்து 7நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது. இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் மூன்றாம் சுற்றுக்கு இடைவெளியின்றி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்படும். பாசன காலத்தை விரைந்து முடிந்து காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    Next Story
    ×