என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெய்யூர் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல்
    X

    மெய்யூர் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல்

    • வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் வேல்முருகன் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி(வயது47). இவர் பூண்டி ஒன்றிய 4-வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. தேன்மொழி இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் வேல்முருகன் இடையூறு செய்தாராம். மேலும், இதுகுறித்து புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டினாராம்.

    இந்த சம்பவம் குறித்து தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×