search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்  ஓவியம், சிற்பக்கலை பயிற்சி முகாம்
    X

    கள்ளக்குறிச்சியில் ஓவியம், சிற்பக்கலை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சியில் ஓவியம், சிற்பக்கலை பயிற்சி முகாம்

    • மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
    • ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சென்னை தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள மாவட்ட மர சிற்பக் கலைஞர்கள் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு விருக்ஷா - மரசிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டிடத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி பயிற்சி முகாமில் தொடக்கி வைத்தார்.

    தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் வரவேற்றார். இதில் ஓவியர்கள் அய்யப்பா, ராஜப்பா, தமிழ்நாடு தொழில், புத்தக நிறுவன திட்ட முன்னோடி செந்தமிழ் அரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மர சிற்பக் கலைஞர் சக்திவேல் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஓவியம் மற்றும் சிற்பக்கலை குறி்த்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×