என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வர்ணம் பூச்சு
    X

    வர்ணம் பூசப்பட்டு காட்சி தரும் அரசு ஆஸ்பத்திரி.

    செங்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வர்ணம் பூச்சு

    • செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • காந்தி செல்வின் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கு பிரசவ வார்டு கட்டிடம் முழுவதும் வர்ணம் தீட்டி தந்துள்ளார்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கத்தை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலா் அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நமது மருத்துவ மனை மகத்தான மருத்துவ மனை என்ற மாபெரும் சுகாதார திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டையை சேர்ந்த தொழிலதிபரும் பாவூர்சத்திரம் அருகில் மேலமெஞ்ஞானபுரம் குஷி வாட்டர் பார்க் அதிபருமான காந்தி செல்வின் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கு பிரசவ வார்டு கட்டிடம் முழுவதும் வெள்ளையடித்து வர்ணம் தீட்டி தந்துள்ளார்.

    அவருக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அனைத்து பணியாளர்கள் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×