என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்
- யோகா பயிற்சியாளர் சுமதி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டினார்.
- பேராசிரியர் கனகாம்மாள் யோகாவின் அவசியம் குறித்து பேசினார்.
ஊட்டி,
ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் சர்வதேச யோகா தினம், முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடந்தது. இதில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பயிற்சியாளர் சுமதி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டி, பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இதனை தொடர்ந்து அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகாம்மாள் நோயற்ற வாழ்வுக்கு யோகாவின் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.
Next Story






