search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகை எதிரொலி -பாவூர்சத்திரம் தினசரி சந்தையில்  காய்கறிகள் விலை அதிகரிப்பு
    X

    ஓணம் பண்டிகை எதிரொலி -பாவூர்சத்திரம் தினசரி சந்தையில் காய்கறிகள் விலை அதிகரிப்பு

    • கேரளா வியாபாரிகள் அதிகளவில் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்கின்றனர்.
    • இன்றும் நாளையும் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்காசி:

    ஓணம் பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கேரளாவில் இருக்கும் வியாபாரிகள் அதிகளவில் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தையில் காய்கறிகளின் விலை சீராக இருந்து வந்த நிலையில் தற்போது ஓணம் பண்டிகையின் எதிரொலியாக ரூ.12-க்கு விற்பனையான தக்காளி ரூ. 34-க்கும், ரூ.15-க்கு விற்பனையான வெங்காயம் ரூ.24, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ. 70, பீன்ஸ் ரூ. 100, வெண்டை ரூ.45,அவரை ரூ. 28, புடலை ரூ. 25, பாகற்காய் ரூ. 25, சுரைக்காய் 10 முறையே விலை அதிகரித்து விற்பனையாகி வருகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாட இன்னும் 2 தினங்கள் மட்டுமே இருப்பதனால் இன்றும் நாளையும் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள வியாபாரிகள் அதிகளவில் பாவூர்சத்திரம் காய்கறி சந்தையை நோக்கி வந்த வண்ணம் இருப்பதால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×