என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனகதாசர் ஜெயந்தி விழாவையொட்டி தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு
- கர்நாடக மாநில பக்த கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
- பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் சேவா சமிதி சார்பில் சார்பில் 535-வது கர்நாடக மாநில பக்த கனகதாசர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவிற்கு, கனகதாசர் சேவா சமிதி தலைவா பாபன்னா தலைமை தாங்கினார். விழாவில் ஆந்திரா மாநில எம்.பி. கோரனடி மாதவராவ், டெலலி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மௌரியா, ஆனொக்கல் சிவன்னா, கர்நாடக நடிகர் யோகேஷவா, பெங்களு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் ரத்ததான முகாம், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பலவேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குல தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வீரகாசி நடனத்துடன் ஊர்வலமாக விழா மேடை அருகே கொண்டு வரப்பட்டது.
அங்கு கூடிய குருபர் குல மக்கள் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாவடா எனும் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
விழாவில் அன்னதானம் நடைபெற்றது.






