search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு  சேலம் மத்திய ஜெயிலில் 2 கைதிகள் விடுதலை
    X

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மத்திய ஜெயிலில் 2 கைதிகள் விடுதலை

    • நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
    • இதில் சேலம் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்த கைதிகள் 15 பேரை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் சேலம் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். இதில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 41). வழிப்பறி வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிய 7 மாதங்களுக்கு முன்பாகவே நேற்று விடுதலையானார்.

    இதேபோல் வேலூர் மாவட்டம் லத்தேரியை சேர்ந்தவர் உசேன் முகமது (39). இவர் வழிப்பறி வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். நன்ன டத்தையால் ஓராண்டுக்கு முன்பாக, நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

    Next Story
    ×