என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் - அரூர் மெயின்ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது
- சேலம்- அரூர் மெயின்ரோடு சாலையோரம் நின்ற பெரிய மரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவில் விழுந்தது.
- அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.குறிப்பாக நேற்று மாலை அயோத்தியாப்பட்டணம் அருகே மழை வெளுத்து வாங்கியது. இதில் சேலம்- அரூர் மெயின்ரோடு சாலையோரம் நின்ற பெரிய மரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவில் விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.மரம் முறிந்து விழுந்ததை அடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பக்கம் 4 கிலோ மீட்டர், இந்த பக்கம் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு சக்கர வாகனங்கள், கார், பஸ்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து பொதுமக்கள் மரத்தின் ஒவ்வொரு கிளைகளாக வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
Next Story