என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர்-தளி சாலையில்   மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
    X

    ஓசூர்-தளி சாலையில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

    • லாரி ஒன்று முருகன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வாழப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மோட்டார்சைக்கிளில் ஓசூர் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    ஓசூர்-தளி சாலையில் அவர் சென்ற போது பின்னால் வந்த லாரி ஒன்று முருகன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×