என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே கோட்ட செயற்பொறியாளர் இந்திரா பேசிய போது எடுத்த படம்.
மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு
- பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது,
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு என வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மத்தூர் உபகோட்டம் சார்பில் போச்சம்பள்ளி மின் பகிர்மான கோட்ட செயற் பொறியாளர் இந்திரா, முன்னிலையில், கிருஷ்ணகிரி செயற்பொ றியாளர் (பொது) வேலு தலைமையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது, இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு என வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து மின் சிக்கனம் குறித்து பிரதான சாலை வழியாக பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக மத்தூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது.
இதில் மின் சேமிப்பு மின் சிக்கனம் குறித்து துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தும், காணொலி காட்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல் போச்ச ம்பள்ளி, அரசம்பட்டி, பண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் உதவி செயற் பொறியாளர் மகாலட்சுமி, போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாவின், உதவி பொறியாளர்கள் பெருமாள், சிவக்குமார், சரவணன், அசோக்குமார், அருள், கார்த்திகேயன், மின் வாரிய மேற்பார்வையாளர்கள், மின்பாதை ஆய்வாளர்கள் மற்றும் மின் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






