என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில்   தலித் ஊராட்சி  தலைவா்களுக்கான பயிற்சி முகாம்
    X

    கோப்புபடம். 

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தலித் ஊராட்சி தலைவா்களுக்கான பயிற்சி முகாம்

    • மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
    • திருப்பூா் ஒன்றிய கிராம கூட்டமைப்பின் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தலித் ஊராட்சித் தலைவா்களுக்காக உள்ளாட்சி நிா்வாகத்தில் சமூகநீதி என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் அரிமா சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் தலைவா்நந்தகோபால் தலைமை வகித்தாா், மாவட்டப் பொருளாளா்பஞ்சலிங்கம் வரவேற்றாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் யு.கே.சிவஞானம் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா்.

    இதில் தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம், கிராம சபையின் முக்கிய அம்சங்கள் தொடா்பாக மாநிலக் குழு உறுப்பினா் வேணியும், தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவா்கள் மீதான பாகுபாடுகளும்-தடுப்பதற்கான வழிமுறைகளும் தொடா்பாக மாநிலத் தலைவா் செல்லக்கண்ணு பேசினாா்.இதில் பங்கேற்ற ஊராட்சித் தலைவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.முடிவில் திருப்பூா் ஒன்றிய கிராம கூட்டமைப்பின் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.

    Next Story
    ×