என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த முதியவர் பலி
- புகளூர் வள்ளுவர் நகர் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த முதியவர் கீழே விழுந்து பலி
- மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சோகம்
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் கொண்டிசெட்டிபட்டி மோகனூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (53). இவர் கோவைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தார். பேருந்தில் அதிக பயணிகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் இடம் பற்றாக்குறையால் ராதா கிருஷ்ணன் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தார். அப்போது பேருந்து கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற பேருந்து புகளூர் வள்ளுவர்நகர் மேம்பால சர்வீஸ் ரோட்டில் சென்றது. அப்போது திடீரென பேருந்து டிரைவர் ராஜா பிரேக் அடித்துள்ளார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் நிலை தடுமாறி பேருந்து படிக்கட்டில் இருந்து சாலையில் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ராதாகிருஷ்ணனை ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில்வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் , பஸ் டிரைவர் ராஜா, கண்டக்டர் கலையரசன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






