என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே தீயில் கருகி மூதாட்டி பலி
- மண்எண்ணெய் கேன் மூடி எதிர்பாராதவிதமாக திறந்து தீப்பிடித்ததில் மூதாட்டி உடல் கருகியது.
- சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி:
தேனி அருகில் உள்ள பொம்மையகவுண்டன்பட்டி மருத்துவர் தெருவை சேர்ந்த மாலு மனைவி குருவம்மாள்(87).
இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது மண்எண்ணெய் கேன் மூடி எதிர்பாராதவிதமாக திறந்து தீப்பிடித்தது.
உடலில் பலத்த தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






