என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
  X

  பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஷரண்யா ஸ்ரீக்கு பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி பெல், செயலர் கஸ்தூரிபெல் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.


  பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வு எழுதிய 212மாணவ-மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும் 500 மதிப்பெண்களுக்கு மேல்50 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஷரண்யா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

  தென்காசி:

  தென்காசி பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-௧ பொதுத்தேர்வில் 212 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

  பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஷரண்யா ஸ்ரீ 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஐஸ்வர்யா 587 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் அனுஷ்யா மற்றும் சிவரஞ்சனி ஆகிய இருவரும் 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தேர்வு எழுதிய 212மாணவ-மாணவிகளில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும் 500 மதிப்பெண்களுக்கு மேல்50 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  கணக்கு பதிவியலில் 3 மாணவர்களும் கணினி அறிவியலில் 2 மாணவர்களும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2 மாணவர்களும் இயற்பியல் பாடத்தில் 2 மாணவர்களும் பொருளியல் பாடத்தில் 1 மாணவரும் கணித பாடத்தில் 2 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் மற்றும் அனைத்து ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

  Next Story
  ×