search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு:  சேலம் ரெயில் நிலையத்துக்கு  திரண்டு வந்த விவசாயிகள்
    X

    ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

    தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு: சேலம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்த விவசாயிகள்

    • தற்போது இந்த கிராமப் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் புதியதாக அமைக்க உள்ளனர்.
    • இந்த பாலத்தின் வழியாக லாரிகள் மூலம் வெளிப்பகுதிகளுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாது.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தையொட்டி பொர்படா குறிச்சி, விலம்மார் கிராமம், காட்ட நந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், மேலும் இங்கு வசிப்பவர்கள் விவசாயம், அரிசி ஆலை, நாட்டு சர்க்கரை ஆலை ஆகிய தொழில்களை செய்து வருகின்றனர்.

    இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதற்கு தச்சூர் கிராமம் வழி முக்கிய இடமாக உள்ளது. தற்போது இந்த கிராமப் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் புதியதாக அமைக்க உள்ளனர்.

    அவ்வாறு தரைப்பாலம் அமைத்தால், இந்த பாலத்தின் வழியாக லாரிகள் மூலம் வெளிப்பகுதிகளுக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாது. எனவே அதற்கு பதிலாக இந்தப் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் சேலம் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ரெயில்வே கோட்ட மேலாளரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்,

    Next Story
    ×