என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோலைக்கொட்டாய் கிருஷ்ணாபுரம்  பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்சுகள்
    X

    பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச் ஆகியவை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கினாா்.

    சோலைக்கொட்டாய் கிருஷ்ணாபுரம் பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

    • அரசு பள்ளிக்கு மாணவ மாணவிகள் வருகை அதிகாித்துள்ளது.
    • மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடியாா் செயல்பட்டதால் அரசு பள்ளியில் மாணவா் சோ்க்கை அதிகாித்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுாி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட சோலைக்கொட்டாய் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி யிலிருந்து மாணவ மாணவிகளுக்கு தேவையான டெஸ்க் மற்றும் பென்ச் இருக்கைகளை எம்எல்ஏ கோவிந்தசாமி வழங்கினாா்.

    பின்னா் மாணவ, மாணவிகளிடம் பேசிய எம்எல்ஏ கோவிந்தசாமி தமிழகத்தில் தனியாா் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு மாணவ மாணவிகளின் வருகை அதிகாித்துள்ளது.

    இதற்கு காரணம் எடப்பாடியாா் கொண்டு வந்த 7.5 சதவீதம் ஒதுக்கீடு காரணம் எனவும் அரசு பள்ளியில் படித்து மருத்துவா் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடியாாின் திட்டங்களால் அரசு பள்ளியின் மாணவா் சோ்க்கை அதிகாித்துள்ளது.

    அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் அம்மா எனவும் தொிவித்தாா்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுாி ஒன்றிய தலைவா் நீலாபுரம் செல்வம் மற்றும் பள்ளி மாணவ மாணவியா்கள் பலா் இருந்தனா்.

    Next Story
    ×