என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியா?... ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியது.
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விதிகளுக்கு முரணானது.
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்தில் அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் தரப்பு விருப்ப மனு வாங்க வரும்போது பிரச்சனை ஏற்படும் சூழல் இருந்தது. எனவே பாதுகாப்பு கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பரவிய தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிதிகளுக்கு முரணானது என்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விருப்ப மனு தாக்கல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story