search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவிலியர் தினம் கொண்டாட்டம்
    X

    செவிலியர்கள் தின கொண்டாட்டம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்றது.

    செவிலியர் தினம் கொண்டாட்டம்

    • செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
    • செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக 'விளக்கேந்திய மங்கை' , 'கை விளக்கேந்திய காரிகை' என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவரும் , நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத சேவையை கவுரவிக்கும் விதத்தில் தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் செவிலியர்கள் தின கொண்டாட்டம் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் நடைபெற்றது .

    ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் , செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டினர்.

    மேலும் அவர் பேசுகையில் " சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பாசத்துடனும், பரிவுடனும் நடந்து கொண்டு கனிவான சேவையை வழங்கி வரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.

    முன்னதாக தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி , தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா சரவணன் ஆகியோர் செவிலியர்களுக்கு இனிப்புகளை வழங்கி செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபுராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் மாலதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×