search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரத்தில் சீரமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடை - கலெக்டர் திறந்து வைத்தார்
    X

     கலெக்டர் செந்தில் ராஜ் நலத்திட்ட உதவிகளை பணியாளர்களுக்கு வழங்கியபோது எடுத்தபடம்

    சாயர்புரத்தில் சீரமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடை - கலெக்டர் திறந்து வைத்தார்

    • சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • புதுப்பிக்கபட்ட‌ ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது. அதை சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.வி.பி.எஸ்.பொ. ஜெயக்குமார் மற்றும் சாயர்புரம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் உள்ளிட்டோர் நிதி திரட்டி புதிய ரேஷன் கடையை புதுப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்நிலையில், புதுப்பிக்கபட்ட ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார். பின்னர் வீடுவீடாக சென்று பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை பொது மக்களிடம் விநியோகம் செய்தார்.

    தொடர்ந்து, அப்பகுதியில் மரகன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். சேகரகுரு இஸ்ரவேல் ராஜாதுரைசிங், ஏரல் தாசில்தார் கண்ணன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி, திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், சாயர்புரம் செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா, ப்ளாட்டினா மேரி, இந்திரா, சுமதி, முத்து மாரி, ராமமூர்த்தி, முத்துராஜ், மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண், செபத்தையாபுரம் அரிமா சங்க தலைவர் ஆலயமணி, அகதாஸ், 14- வார்டு பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×