என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண புதிய ரவுண்டானா- மேயர் ஜெகன் பெரியசாமி  நடவடிக்கை
    X

    தூத்துக்குடி வி.இ.ரோட்டில் புதிய ரவுண்டானா அமைய உள்ள பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண புதிய ரவுண்டானா- மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை

    • வி.இ.ரோட்டில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • பணிகள் துரிதமாக நடைபெற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் போக்கு வரத்து நெருக்கடிக்கு தீர்வு கண்டு,சீரான போக்கு வரத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி, சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சாலையோர பகுதிகளில் நடை பாதைகள், வடி கால்கள் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    போக்குவரத்து சீராக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் தாமோதரன்நகர் சந்திப்பு வி.இ.ரோட்டில் போக்கு வரத்து அதிகமாக இருப்பதாக வந்த தகவலை யடுத்து அந்தப் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்க முடிவு எடுக்கப்பட்டு ள்ளது. இதைத்தொடர்ந்து ரவுண்டானா அமைய உள்ள இடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பணிகள் துரிதமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×