என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கடையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை
    X

    கீழக்கடையத்தில் புதிய சிமெண்ட் சாலையை சேர்மன் செல்லம்மாள் திறந்து வைத்த காட்சி.


    கீழக்கடையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை

    • கீழக் கடையம் பகுதியில் புதிய வாருகாலுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
    • திறப்பு விழாவிற்கு கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் யூனியன் கீழக் கடையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலக தெருப்பகுதியில் 15 -வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ .16 லட்சம் மதிப்பில் புதிய வாருகாலுடன் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் முன்னிலை வகித்தார். கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் கடையம் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக டி.கே. பாண்டியன், முகமது உசேன், அழகுதுரை, முருகன், முத்துலட்சுமி ராமதுரை, மாரியப்பன், மாரிசுப்பு, கணேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயம் நன்றி கூறினார்.

    Next Story
    ×