search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் அருகே    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    ஆலகிராம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.  

    மயிலம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • மயிலம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கர்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மயிலம் அருேக ஆலகிராம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சுரேஷ் தலைமை தாங்கினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார் முகாமில்சிவக்குமார் எம்.எல்.ஏ. மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து சிறப்புறையாற்றினார்கள்.இதில் ஸ்கேன், எக்ஸ்ரே,இரத்தப் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, சித்த மருத்துவம், கர்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் நிலவேம்பு கசாயம், ஊட்டச்சத்து கண்காட்சி, ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சேதுநதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயன், மகேஸ்வரி குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், தி.மு.க. நிர்வாகி சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூங்கொடி சுகாதார மே ற்பார்வை யாளர் துறை சாமி, ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் நிலவேம்பு கசாயம், ஊட்டசத்து உணவு வழங்கப்பட்டது, முடிவில் பள்ளி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×