என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.
களக்காடு அருகே புதிதாக பயணிகள் நிழற்குடை- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- மேல தேவநல்லூர் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்புவிழா நடைபெற்றது.
- பத்மனேரி கிராம பொதுமக்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
களக்காடு வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட தேவநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள மேல தேவநல்லூர் கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பயணிகள் நிழற்குடை வேண்டி மனு அளித்ததன் பெயரில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதியதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். அதன்பின்பு மேலதேவநல்லூர் கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினார்.
அதன்பின்பு பத்மனேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி போதுமானதாக இல்லாத காரணத்தால் கூடுதல் கழிப்பறை வசதி கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.பத்மனேரி கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால், மாவட்ட துணை தலைவர் செல்லப் பாண்டி, களக்காடு,தெற்கு, களக்காடு நகராட்சி, நாங்குநேரி மேற்கு, மற்றும் பாளையங்கோட்டை, தெற்கு ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், அலெக்ஸ், ஜார்ஜ்வில்சன், வாகைதுரை, நளன், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் பால்பாண்டி, பானு, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மாணிக்கம், சித்திரைவேல், நம்பித்துரை, ராஜா, சுந்தர், பொன்ராஜ், யாக்கோபு, இளைஞர் காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி தலைவர் ராஜ்குமார்,ஒன்றிய கவுன்சிலர் களக்காடு 2-வது வார்டு கவுன்சிலர் வனிதா, அன்னபாண்டி, மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






