என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே போலி டாக்டர் கைது
- குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மெடிக்கல் கடை, போலியாக வைத்தியம் பார்த்து வந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
- சோதனையில் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.இதையடுத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார். அவரது மெடிக்கல் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் அசோக்குமார் (40). பார்மசி படித்துள்ள இவர், ஓசூர் அருகே குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மெடிக்கல் கடை, போலியாக வைத்தியம் பார்த்து வந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதையடுத்து, கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, குமாரனபள்ளி கிராம நிர்வாக அலுவலர் பழனி மற்றும் மத்திகிரி போலீசார் அடங்கிய குழு நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.இதையடுத்து அசோக்குமார் கைது செய்யப்பட்டார். அவரது மெடிக்கல் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
Next Story






