என் மலர்
உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகேயுள்ள மாமரத்துப்பள்ளம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
- 3 காட்டு யானைகள் முகாமிட்டு விலை நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
- இரவு நேரங்களில் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யுள்ளது மாமரத்துப்பள்ளம்.
ஒகேனக்கல் வனப்பகு தியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டு விலை நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட்டாலும் இரவு நேரங்களில் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சத்துடன் உள்ளனர்.
யானைகள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story