என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
- நவராத்திரி விழாவையொட்டி தினமும் காலை வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.
- இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் காலை வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். இதனையொட்டி நடைபெற்ற துர்கா பூஜையில் சிறப்பு அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம், சுண்டல் வழங்கப்பட்டது.
Next Story






