என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாராயணசாமி கோவில் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
களக்காடு அருகே நாராயணசாமி கோவில் திருவிழா
- களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு ஸ்ரீமத் நாராயணசுவாமி கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது
- விழாவை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு ஸ்ரீமத் நாராயணசுவாமி கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் முட்டப்பதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
விழாவை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. பூச்சிறப்பு, வாணவேடிக்கை, உச்சிப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.. அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story