search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்
    X

    சிப்காட் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்

    • 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வளையப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நிலம் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    கருத்துகேட்பு கூட்டம்

    அவர்கள் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சிப்காட் சம்மந்தமான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

    இதில் சிப்காட் எதிர்ப்பாளர்கள், நிலம் பாதிக்கப்படும் விவசாயிகள், சிப்காட் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவே சிப்காட் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தனர்.

    மீண்டும் போராட்டம்

    சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதாலும், அதிகாரிகள் கேட்டுக் கொாண்டதாலும் கடந்த 2 வாரங்களாக அவர்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    கருத்துக்கேட்புக் கூட்டம் முடிவுற்ற நிலையில் இன்று மோகனூர் ஊராட்சி ஒன்றியம், வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×