என் மலர்
உள்ளூர் செய்திகள்

எருமப்பட்டி அருகே பயங்கரம் ரியல் எஸ்டேட் தகராறில் வக்கீல் கொலையா?
- மணிகண்டன் (43). வக்கீல். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் எருமப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- பின்னர் அந்த கும்பல் திடீரென வக்கீல் மணிகண்டனை வழிமறித்து தாக்கியது.
எருமப்பட்டி:
நாமக்கல் அடுத்த எருமப்பட்டி வரகூரை சேர்ந்தவர் மணிகண்டன் (43). வக்கீல். இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் எருமப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் மணிகண்டனை ஒரு கும்பல் பின் தொடர்ந்து வந்தது.
வெட்டிக் கொலை
பின்னர் அந்த கும்பல் திடீரென வக்கீல் மணிகண்டனை வழிமறித்து தாக்கியது. தொடர்ந்து அவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குைலந்த வக்கீல் மணிகண்டன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழந்தார்.
இதையடுத்து அந்த மர்ம கும்பல் மீண்டும் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் வக்கீல் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.
போலீசுக்கு தகவல்
இதுப்பற்றி தகவல் தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், டி.எஸ்.பி. தனராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் போலீசார் கொலைசெய்யப்பட்ட வக்கீல் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வக்கீல் மணிகண்டன் கொலை செய்து போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கீல் ரியல் எஸ்டேட் தகராறில் ெகாலை செய்யப்பட்டாரா, அல்லது வேறுகாரணமாக என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.






