என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருபானந்த வாரியார் மற்றும் காவிரித்தாய் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
பரமத்தி வேலூர் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை, காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை
- பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை மற்றும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நாட்டில் நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தர் மடாலயத்தினர் அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் குருபூஜை மற்றும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நாட்டில் நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரித்தாய்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திருமுருக கிருபானந்த வாரியர் சாமிக்கு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. தீப ஆராதனை, சாதுக்கள் வழிபாடு மற்றும் அருளாசி வழங்குதலும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. விழாவில் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மடாலயத்தினர் மற்றும் அகில பாரத சந்நியாசிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.






