என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டுவெல்லம் சிப்பம் ரூ.1,400 ஆக உயர்வு
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டுவெல்லம் சிப்பம் ரூ.1,400 ஆக உயர்வு

    • பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சேளூர், கொந்தளம், பெரிய மருதூர், சின்ன மருதூர், சின்ன சோளிபாளையம், ஆனங்கூர், கள்ளிப்பாளையம், கொத்த மங்கலம், கபிலக்குறிச்சி, கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லி கோவில், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை ஒன்றிய பகுதிக ளில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    சந்தை

    ஆலைகளில் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பா ளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3000 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.

    வெல்லம் சிப்பம் ரூ.1,400

    சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.

    இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×