என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்போலீஸ் தேர்வுக்கு இலவச பயற்சி
- தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- முழு மாதிரித் தேர்வாகவும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரி யத்தால் அறிவிக்கப்பட்ட 3,359 பணிக்காலியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இதன் அடிப்படையில், இத்தேர்விற்கான மாதிரித் தேர்வு இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பாடவாரியாவும், முழு மாதிரித் தேர்வாகவும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலா கவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.
எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த நாமக்கல் மாவட்ட விண்ணப்ப தாரர்கள் அனைவரும் இம்மாதிரித் தேர்வினில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






