என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்கணாபுரத்தில் கொப்பரை தேங்காய் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை
    X

    கொங்கணாபுரத்தில் கொப்பரை தேங்காய் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை

    • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலை, தேங்காய் கொப்பரை, எள் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • பொது ஏலத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் விற்பனை நடைபெற்றது.

    எடப்பாடி:

    சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணாபுரம் அருகே உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலை, தேங்காய் கொப்பரை, எள் உள்ளிட்டவை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் விற்பனை நடைபெற்றது.

    இதில் முதல் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,210 முதல் ரூ.8,819 வரை விற்பனை யானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,725 முதல் ரூ.8,010 வரை விலை போனது. அடுத்து வரும் நாட்களில் இம்மையத்தில் நிலக்கட லைக்கான பொது ஏலம் நடைபெற உள்ளதாகவும், இதில் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நிலக்கடலைகளை எந்தவித கட்டணமும் இன்றி விற்பனை செய்து பயன்பெறுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×