search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருமபட்டியில்ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
    X

    பயிற்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    எருமபட்டியில்ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

    • தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வள மையம் சார்பில் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சி

    முதற்கட்டமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 3, 4 -ந் தேதி ஆகிய 2 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. 2-ம் கட்டமாக 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5, 6-ந்தேதிகளில் பயிற்சி நடைபெற்றது.

    இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் பயிற்சியினை பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்த சிறப்பு தகவல்களை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பயிற்சியை கண்காணித்தார்.

    புதுமைகள்

    இதில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல், துணை கல்விகள் பயன்படுத்தும் உத்திகள், வரைபடம் வரைதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளர்களாக எருமப்பட்டி வட்டார ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×