என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆடுகள் போலீஸ் விசாரணை
- கார்த்திக் வீட்டின் அருகில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- ஆடுகளை மேய்ச்சலுக்காக பட்டியிலிருந்து திறந்துள்ளார். அப்போது அதிலிருந்த 6 ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் துறையூர் சாலை கூலிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது தாய் சரஸ்வதி ரெட்டிபட்டி ஊராட்சி துணை தலைவராக உள்ளார். கார்த்திக் வீட்டின் அருகில் 12 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக பட்டியிலிருந்து திறந்துள்ளார். அப்போது அதிலிருந்த 6 ஆடு மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்தி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் லைட் கட்டுவதில் ஒரு தரப்புடன் முன்விரோதம் இருப்பதாகவும், அதன் காரணமாக ஆடுகளை கொன்று இருக்கலாம் எனவும், இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






