search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிமாதம் என்பதால் முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததால்பூக்களின் விலை குறைந்தது
    X

    ஆடிமாதம் என்பதால் முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததால்பூக்களின் விலை குறைந்தது

    • பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா

    பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், சானார்பாளையம், நகப்பாளையம், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பூக்கும் தருவாயில் வந்த போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலை களாகவும் ,தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்கின்றனர். சில வியா பாரிகள் உதறிப் பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகி றது. தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள் ளது. அதனால் பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமானது.

    நேற்று நடத்த ஏலத்தில், கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 280 ரூபாய்க்கு விற்பனை யான சம்பங்கி 120 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 80 ரூபாய்க்கும் விற்பனையானது.

    அதேபோல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 260 ரூபாய்க்கும் விற்பனை யானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதா வது:- கடந்த வாரம் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. மேலும் இப்போது வெயில் சுட்டெ ரிப்பதால், பூக்களின் விளைச்சல் அதி கரித்துள்ளது.

    வெயில் அதிகமாக அடிக்கும்போ து, பூக்களின் விளைச்சல் அதிகரிக்கும். அதனால், தற்போது பூக்களின் வர த்து அதிகமாகியுள்ளது. தற்பொழுது ஆடி மாதம் என்பதால் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இல்லாமல் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆவணி மாதம் சுப முகூர்த்த நாட்களில், பூக்களின் விலை அதி கரிக்கும் என எதிர்க்கப் படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×