search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    திருச்செங்கோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும்பணியையும், கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகமணிகண்டன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நக ராட்சி சந்தைப்பேட்டையில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கடைகள் கட்டும் பணியையும், ரூ.4 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டும் பணியையும், ரூ.1 கோடியே 89 லட்சத்து15 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும்பணியையும், கலெக்டர் உமா நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சி புளியம்பட்டி பாளையத்தில் ரூ.6.71 லட்சம் மதிப்பீட்டில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.85 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ள தையும், ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் புள்ளி கவுண்டம்பாளை யத்தில் கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டுள்ளதையும், நாடார் தெருவில் ரூ.2.49 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக் கப்பட்டுள்ளதையும் கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    மேலும், ஆனங்கூர் ஊராட்சி சேவை மையம், ரேசன் கடை, சட்டையும் புதூர் தனியார் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். பின்னர் ரேசன் கடை யில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து கலந்து ரையாடி அனைவரையும் உரிய ஆவணங்களுடன் முகாம் நடைபெறும் போது தங்களது விண்ணப்பித் தினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து மல்ல சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், செண்பகமாதேவி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு களின் போது, திருச்செங் கோடு தாசில்தார் பச்ச முத்து, திருச்செங்கோடு நக ராட்சி ஆணையாளர் ஜெய ராமராஜா, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கள் மாதவன், கஜேந்திர பூபதி, மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் லோகமணிகண்டன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×