என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
- காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் பொரவச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சொந்த ஊரான பொரவச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றார்.இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் உள்ள 4 பவுன் மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவற்ஆறை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story






