என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் கர்நாடக அரசு பஸ்சை மறித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கிருஷ்ணகிரியில் கர்நாடக அரசு பஸ்சை மறித்து நாம் தமிழ் கட்சியினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் தர மறுத்து கன்னட அமைப்புகள் பந்த் நடத்தியது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கரு. பிரபாகரன் தலைமை தாங்கினார். அப்போது காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு, கன்னட அமைப்புகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினார்கள்.
அப்போது கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வழியாக சென்ற கர்நாடகா அரசு பஸ்சை திடீரென அக்கட்சியினர் மறித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும், தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
தொடர்ந்து அங்கிருந்து சாலையில் ஊர்வலமாக நடந்து சென்ற அக்கட்சியினர், கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






