search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநங்கைகள் குறைகளை கேட்க எனது அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து  இருக்கும்: அமைச்சர் உதயநிதி பேச்சு
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது எடுத்த படம். அருகில் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதி வேந்தன், கலெக்டர் பழனி, பொன். கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் உள்ளனர்.

    திருநங்கைகள் குறைகளை கேட்க எனது அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும்: அமைச்சர் உதயநிதி பேச்சு

    • திருநங்கைகள் என்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, பெயர் வைத்து அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி னார்.
    • மாதாந்திர உதவித்தொகை‌ ரூ.1000-ல் இருந்து, ரூ.1,500 ஆக உதவி தொகை உயர்த்தி தரப்பட்டுள்ளது.

    விழுப்புரம், மே.2-

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மிஸ்கூவாகம்2023 அழகி போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, பொன். கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர். லட்சுமணன், சிவக்குமார்,மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் சப்-கலெக்டர் சிதரா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆண்டுதோறும் மிஸ்கூவாகம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பொழுது போக்குக்காக நடைபெற வில்லை. திருநங்கைகள் திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் யாரும் மேடைக்கு வரவில்லை. இன்று நாங்கள் வந்துள்ளோம். திருநங்கை களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான். திருநங்கைகள் என்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி, பெயர் வைத்து அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி னார்.

    2008-ல் திருநங்கைகள் நல வாரியம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நல வாரியம் முடங்கி விட்டது. மீண்டும் கருணாநிதி வழியில் வந்த மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு இதனை மீண்டும் புதுப்பித்து செயல்படுத்தி வருகிறது. சேப்பாக்கம் தொகுதியில் திருநங்கைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி பலர் பயனடைந்துள்ளனர். சட்டமன்றத்தில் எனது முதல் கன்னி பேச்சில் திருநங்கைகள், மாற்றுத் திற னாளிகளுக்கு கோரிக்கை களை முன்வைத்தேன். மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து, ரூ.1,500 ஆக உதவி தொகை உயர்த்தி தரப்பட்டுள்ளது.

    திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் பலரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருநங்கைகள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் எனது அலுவலகம் காத்தி ருக்கிறது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த ஒரே இயக்கம் தி.மு.க. தான். திருநங்கைகள் குறை களை கேட்பதற்கு எனது அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். வருங்காலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவும் திருநங்கைகள் வருவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளரும் முன்னாள் நகர சபை தலைவருமான ஜனகராஜ்,மாநில ஆதி திராவிடர் நலக்குழு இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஷ்பராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளரும், ஆவின் சேர்மனுமான பிடாகம் தினகரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்செல்வி பிரபு, நகர செயலாளர் சர்க்கரை,நகர பொருளாளர் என்ஜினீயர் இளங்கோவன், விழுப்புரம் நகர இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் மணிகண்டன்,கோலியனூர் யூனியன் சேர்மன் சச்சிதா னந்தம், ஒன்றிய செய லாளர்கள் வக்கீல் கல்பட்டு ராஜா, தெய்வசிகா மணி, மும்மூர்த்தி, ஜெயம் ரவி, மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, முன்னாள் தொண்டர் படை பாலு, கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×